தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே – அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் ந மனமே

1. காசினிதனிலே நேசமதாகக்
கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார் – தேன்

2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்
தாமே ஈந்தவராம் – பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி மனமே – தேன்

3. காலையில் பனிபோல் மாயமாய் உலகம்
உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே – தேன்

4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம் – நயும்
அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார்
ஆசை கொள் நீ மனமே. – தேன்

5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்று நாமம் – அதைப்
பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில்
புகுவாய் நீ மனமே – தேன்



then inimaiyilum iyesuvin namam

then inimaiyilum iyesuvin namam
thivviya mathuramame – athaith
thediye nadi oodiye varuvay, thinamum nee maname

1. kasinidhanile nesamathakak
kashththai uthdhariththe – bavak
kachatathai aruththus sapaththaith tholaiththar – then

2. paviyai meedkath thaviye uyiraith
thame iinthdhavaram – pinnum
nemiyam karunai nilaivaramundu
nidham thuthi maname – then

3. kalaiyil panipol mayamay ulakam
ubayamay neengkividum – endrum
karthdharin badham nischayam nambu
karuththay nee maname – then

4. thunpaththil inpam thollaiyil nalla
thunaivaram nesaridam – nayum
anpathays serththal anaiththunaik kabbar
aasai kol nee maname. – then

5. pulokaththarum melokaththarum
pukazhnththu potrru namam – athaib
pundukondalthan ponnakar vazhvil
pukuvay na maname – then